தெலங்கானா மாநில சிஇடி தேர்வு ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

Posted By:

ஹைதராபாத்: தெலங்கானா மாநில பொது நுழைவுத் தேர்வுக்கான (டிஎஸ் இஏஎம்சிஇடி) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையிலுள்ளன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

தெலங்கானா மாநிலத்திலுள்ள கல்லூரிகளில் என்ஜினீயரிங், வேளாண், மருத்துவப் படிப்புகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தெலங்கானா மாநில சிஇடி தேர்வு ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

இந்த ஆண்டில் இந்தத் தேர்வை ஜவாஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. தெலங்கானா மாநில உயர் கல்வி கவுன்சில் சார்பில் இந்த தேர்வை பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.

ஹால் டிக்கெட்டுகளைப் பெற https://www.tseamcet.in/Content/HTLogin.aspx என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவேண்டும். பின்னர் 'Download Hall Ticket' என்ற இடத்தில் கிளிக் செய்து பிறந்ததேதி, பெயர் விவரங்களைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

இந்தத் தேர்வு மே 15-ம் தேதி நடைபெறவுள்ளது. 2,46,522 மாணவர்கள் தேர்வை எழுதவுள்ளனர்.

English summary
The Engineering, Agriculture and Medical Common Entrance Test (TS EAMCET) admit cards are likely to be released today i e on May 9, 2016 on its official website. TS EAMCET will be conducted by Jawaharlal Nehru Technological University, Hyderabad on behalf of the Telangana State Council for Higher Education (TSCHE). Candidates, who are appearing for the examination can download admit cards by visiting the official website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia