குயிக் ஹரி அப் பட்டியல் ரிலீஸ் பண்ணிட்டாங்க...!

தேர்வு எழுதிட்டு கூலா இருக்கீங்க போல...! தேர்வு எழுதினா மட்டும் போதாது பாஸ்.... யாருக்கு சொல்லுறீங்கனு தெளிவாக சொல்லுங்கனு கேட்பது புரியுது...!

அதான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகளுக்கு தேர்வு எழுதிட்டு காத்திருக்கும் உங்களுக்கான அறிவிப்பு தான் இது; ஐந்து பாடங்களுக்கான தேர்ச்சி பட்டியிலில் இடம்பெறாதவர்கள் கவலைபடாதீங்க... அடுத்த முறை உங்களுக்கு நிச்சியம் வெற்றி தான்.

ரிசல்ட் வந்தாச்சு…!

எந்தெந்த பாடப்பிரிவுகள்

கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், EEE, ECE, மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல், மார்டன் ஆபீஸ் பிராக்டிஸ் ஆகிய பத்து பாடப்பிரிவுகளுக்கு தேர்வான விரிவுரையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

நாம அதில இருக்குமோ உடனே போய் பாருங்க... பட்டியலில் இல்லைனு தெரிஞ்சாலும் வருத்தப்படாதீங்க.. முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!

சரி விஷயத்துக்கு வருவோம்; ஏற்கெனவே, கடந்த ஜூலை 22ஆம் தேதி ஐந்து பாடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தற்போது 10 பாடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, விண்ணப்பம் செய்தவர்களுக்கு கணினி மூலம் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் கடந்த மார்ச் 8ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களின் கல்வித்தகுதி சான்றிதழ், பணி அனுபவம் சான்றிதழ் தொடர்பான கூடுதல் ஆவணங்களை கடந்த மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

பாலிடெக்னிக் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் அடிப்படையில் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, கடந்த ஜூலை 22ம் தேதி 5 பாடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 10 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் பட்டியல் நேற்று(ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளது.

ரிசல்ட் வந்தாச்சு…!

போய் பாருங்க... வெயிட் பண்ணாதீங்க...!

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.nic.in/ என்ற இணையதளம் மற்றும்

http://trb.tn.nic.in/poli2019/30072022/msg subject.htm என்ற இணையப் பக்கத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The list of qualified candidates for vacant lecturer posts in government polytechnic colleges has been published.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X