ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!

செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5ம் தேதியன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!

சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் வருடம் தோறும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையான கற்பித்தல் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும்.

அந்த வகையில் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தின விழா கொண்டாட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 165 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 165 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் 32 ஆசிரியர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 3 பேர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதானது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டதாகும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tomorrow (Sep 5) will be celebrat as Teachers Day: 377 teachers receive "Dr.Radhakrishnan award" at Chennai
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+