சென்னை: ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள புகையிலை வாரியத்தில் புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் கிளார்க் பணியிடங்களும் காலியாகவுள்ளன.
புள்ளியியல் அதிகாரி பணியிடங்களுக்கு பட்டமேற்படிப்பு(பி.ஜி) படித்திருக்க வேண்டும். இதில் புள்ளியியல் பாடம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
கிளார்க் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஆங்கிலம் டைப்பிங் லோயர் கிரேட் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது 18 முதல் 45-க்குள் இருக்கலாம்.
ஆன்-லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பங்களை The Secretary, Tobacco Board, P.B. No. 322, Srinivasarao Thota, G. T. Road, Guntur - 522 004, Andhra Pradesh என்ற முகவரிக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications

