தமிழக சுகாதாரத்துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி அழைக்கிறது!!

Posted By:

சென்னை: தமிழக சுகாதாரத்துறையில் பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்டீஷியன் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நிரப்பவுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மொத்தம் 172 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கணிதம், புள்ளியியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்.

தமிழக சுகாதாரத்துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி அழைக்கிறது!!

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். பணியிடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும். விண்ணப்பங்களை www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி மார்ச் 14 ஆகும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 (பதிவுக் கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100) வசூலிக்கப்படும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) invited online applications for 172 posts of Block Health Statistician in the Family Welfare Department. Eligible Candidates may apply only through online mode on or before 14 March 2016. A Second Class degree in Mathematics with Statistics as an ancillary subject OR A Second Class degree in Statistics with Mathematics as an ancillary subject. Eligible candidates can apply to the post through www.tnpscexams.net / www.tnpscexams.in. Last date of online application is 14 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia