குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் - கருணையில் எத்தனை மார்க் தெரியுமா ?

குரூப் 2 தேர்வில் 6 கேள்விகள் தவறாக இருந்த நிலையில் அவற்றிற்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் - கருணையில் எத்தனை மார்க் தெரியுமா ?

 

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர் என 1199 காலிப் பணியிடங்கள் உள்ளன.

அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 11ம் தேதியன்று நடைபெற்றது.

இதில், 6 லட்சத்து 26, ஆயிரத்து 726 பேர் தேர்வெழுதினர். இந்நிலையில், முதல்நிலை வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்னும் கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என்பதில் எது சரியான விடை என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா ? இதோ உங்களுக்காக வெப்சைட்டுகள்!

இவற்றில், இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என்.அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத் தேர்வில் அடையாளப்படுத்துவதும் தவறானது மட்டுமின்றி தேர்வு எழுதுவோரின் மனதிலும் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்தச் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுபோன்று 6 கேள்விகள் தவறான விடையுடன் கேட்கப்பட்டிருந்த விவகாரத்தில் இது தவறுதான் என்றும், இனி வரும் காலங்களில் இதுபோல் நடக்காது என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, குரூப் 2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்னும் விகிதத்தில் மொத்தம் 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணைப் பிறப்பித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group 2 Grace Marks Given to The Wrong Questions
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X