சென்னை: தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) ஜூனியர் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

ஸ்டாப் கிரேட்-2 பணியிடங்கள் ஒன்றும், ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியிடங்கள் 7-ம், ஜூனியர் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் பணியிடம் ஒன்றும் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் 18-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி: General Manager (HR) Tamil Nadu Newsprint and Papers Limited Kagithapuram - 639 136, Karur District, Tamil Nadu.
பணியிடங்களுக்கு தேர்வுக்காக அழைக்கப்படுவோர் விவரம் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpl.com/index1.aspx-ல் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications












