தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தில் உதவி என்ஜினீயர் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தில் (டிஎன்எம்எஸ்சி) உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், மார்ச் 16-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்தில் உதவி என்ஜினீயர் பணியிடங்கள்!!

மொத்தம் 12 உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பயோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கவேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு வேலை பார்த்த அனுபவமும் இருக்கவேண்டும். இந்தப் பணியிடங்களுக்க ஊதியம் Rs. 9300-34800 + GP Rs. 5100 /- என்ற விகிதத்தில் இருக்கும். வயது 40-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவேண்டும். பணியிடங்கள் சென்னையிலேயே வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 16 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு http://www.tnmsc.com/tnmsc/new/index.php என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.

English summary
Applications are invited by Tamil Nadu Medical Services Corporation Limited. TNMSC is looking out for 12 Assistant Engineer (Bio-Medical) Posts. To know more about pay scale, eligibility, how to apply, selection procedure and important dates scroll down. Name of the post and Number of posts allocated Assistant Engineer (Bio-Medical): 12 posts. Who is Eligible for the TNMSC Job? Candidates interested to apply for the above post must be qualified as per the organisations requirement.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia