கடந்த 21 ஆண்டாக நடைபெற்ற நேரடிப் பொறியியல் கலந்தாய்வுக்கு மாற்றாக, தமிழக அரசு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வுக்கு மாறியிருக்கிறது.
இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் கலந்தாய்வில் எப்படிக் கலந்துகொள்வது எனத் தெரியாமல் மாணவர்களும் பெற்றோர்களும் விழிபிதுங்கி வருகின்றனர்.

இவர்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்யும் விதமாக கலந்தாய்வு எப்படி நடக்கும் என்பதற்கான வீடியோவை யூ டி-யூப்பில் அண்ணா பல்கலைக்கழகம் பதிவேற்றியுள்ளது. கவுன்சிலிங் குறித்த நடைமுறைகளில் சந்தேகம் இருப்பின், இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 18004259779 என்ற எண்ணிலும், 044-2235 9901- 20 என்ற எண்ணிலும் அழைத்து ஆன்லைன் கலந்தாய்வு குறித்த விவரங்களைக் கேட்கலாம்.


Click it and Unblock the Notifications












