பிளஸ் 2 தேர்ச்சியில் விருதுநகர் முதலிடம்... விழுப்புரம் கடைசி இடம்!

9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

By Kani

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சோியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியுள்ளனா். தனித்தோ்வா்கள் உள்பட மொத்தமாக 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 போ் தோ்வு எழுதியுள்ளனா்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததையடுத்து இன்று (புதன் கிழமை) 12ம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சியில் விருதுநகர் முதலிடம்... விழுப்புரம் கடைசி இடம்!

காலை 9.30 மணிக்கு வெளியாகி உள்ள தோ்வு முடிவுகளை www.dge.tn.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 83.35% சதவிகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.4% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 238. மேலும் 231 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

இயற்பியல்96.4%
வேதியியல்95.0%
கணிதம்96.1%
உயிரியியல்96.34
விலங்கியல்91.9%
தாவரவியல்93.9%
வணிகவியல்90.30%
கணக்குபதிவியல் 91%
கணினி அறிவியல்96.1%

இதனிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் , மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN HSC results 2018 Date and Time: Result to be out at tnresults.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X