தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்ட நூல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் முதல்கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் அறிமுகமானது. மீதமுள்ள வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத் திட்டமாக மாற்றப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, புத்தகத் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடப் புத்தகங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதிய பாடத் திட்ட புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக www.tnscert.org என்னும் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட முக்கிய வகுப்புகளுக்கான அனைத்து பாடப் புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதர வகுப்புகளுக்கான பாடப் புத்தங்கள் படிப்படியாகப் பதிவேற்றம் செய்யப்படும் என நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












