இனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!

பள்ளிகளில் பாடம் நடத்தப்படும் வேளைகளின்போது மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

பள்ளிகளில் மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பள்ளி நேரத்தில் மாணவா்கள் தண்ணீா் அருந்த 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும்.

பாட வேளையில் போதியளவு தண்ணீா் குடிக்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதனை தவிர்க்கும் வகையில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீா் அருந்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், சிபிஎஸ்இ உள்பட எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும். நாம் முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே அமல்படுத்தியுள்ளோம். மாணவர்களின் கற்றல் திறனை அளவிடவே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

மேலும், முதல் 3 ஆண்டுகளுக்கு தோல்வி அடையும் மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. இதற்காக மாணவா்கள், பெற்றோா்கள் அச்சப்படத் தேவையில்லை. சிறப்பு வகுப்புகளை நடத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளது தொடா்பாக விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
This Tamil Nadu School Rings water bell to have drinking water breaks
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X