டைம்ஸ் தரவரிசை பட்டியல்: உலக அளவில் இடம்பெற்ற அண்ணா பல்கலை!

டைம்ஸ் உலக பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியல் என்பது உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களின் தரத்தை மையமாகக் கொண்டு ஆண்டிற்கு ஒருமுறை வெளியிடப்படுவதாகும்.

டைம்ஸ் தரவரிசை பட்டியல்: உலக அளவில் இடம்பெற்ற அண்ணா பல்கலை!

 

அதன்படி, இந்த ஆண்டிற்கான டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள்

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள்

உயர்கல்வி குறித்தான அமைப்பின் சார்பில் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசை 2020 என்னும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களின் தரத்தை வைத்து தரவரிசை செய்யப்படுகின்றன.

உலக தரவரிசை 2020

உலக தரவரிசை 2020

ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உலக அளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை மாணவர்களின் நலன் கருதி பல்வேறு அமைப்புகள் வெளியிடுவதைப் போல 2020-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உலக தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

முதல் 300-யில் இந்தியா இல்லை
 

முதல் 300-யில் இந்தியா இல்லை

இந்தப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பிடிக்கவில்லை. இந்தியாவிலிருந்து முதல் பல்கலைக் கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூர் மற்றும் ஐஐடி ரோபர் ஆகிய இரண்டும் 301-350 ஆகிய இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

TNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு!

முதல் இடத்தில் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு

முதல் இடத்தில் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு

இப்பட்டியலில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. முதல் 10 இடங்களில் 7 அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களும், மூன்று பிரிட்டன் பல்கலைக் கழகங்களும் இடம்பிடித்துள்ளன.

பின்னடைவில் இந்திய கல்வி நிறுவனங்கள்

பின்னடைவில் இந்திய கல்வி நிறுவனங்கள்

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்திய கல்வி நிறுவனங்கள் பின்னடைவையே சந்தித்துள்ளன. குறிப்பாக, கடந்த முறை 251-300 க்கு இடைப்பட்ட தரவரிசையிலிருந்த பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி.) இந்த ஆண்டு 301-350 இடைப்பட்ட தரவரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மும்பை, தில்லி ஐஐடி

மும்பை, தில்லி ஐஐடி

ரோபர் ஐஐடி 301-350 இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, காரக்பூர் ஐஐடி ஆகியவை 401-500 க்கு இடைப்பட்ட தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் 501-600 க்கு இடைப்பட்ட தரவரிசையில் காந்திநகர் ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி இந்த ஆண்டும் தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே 601-800 க்கு இடைப்பட்ட தரவரிசையில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

கடந்த ஆண்டு டைம்ஸ் உலக பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்காத சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்த ஆண்டு 1000-ஆவது தரவரிசையில் இடம் பிடித்துள்ளது.

50-க்கும் மேற்பட்ட இந்தியக் கல்வி நிறுவனங்கள்

50-க்கும் மேற்பட்ட இந்தியக் கல்வி நிறுவனங்கள்

அதேப் போல கோவை வேளாண் பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம், திருச்சி என்ஐடி, வேலூர் விஐடி உள்ளிட்டு இந்தியாவைச் சேர்ந்த 54 கல்வி நிறுவனங்கள் இந்த ஆண்டு டைம்ஸ் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
THE World University Ranking 2020 : Anna University Also Got Place In That Ranking
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X