ஆக.12 முதல் ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கவுன்சிலிங்!!

சென்னை: தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் ஆகஸ்ட் 12 முதல் நடைபெற உள்ளது என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு கல்வியாண்டு முழுவதும் ஒரு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பதவி உயர்வு காரணமாக வெளியூர்களுக்கு இடமாறுதலில் சென்றவர்களும் இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங் அட்டவணை விவரம்:

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) ---- ஆகஸ்ட் 12

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு --- ஆகஸ்ட் 14

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) --- ஆகஸ்ட் 16

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு ---- ஆகஸ்ட் 18

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்திற்குள் மாறுதல்) ----- ஆகஸ்ட் 22

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) --- ஆகஸ்ட் 23

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் (55 பேர் மட்டும்) ---- ஆகஸ்ட் 24

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் ------ ஆகஸ்ட் 26 முதல் 29 வரை

உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) ---- ஆகஸ்ட் 12

உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) --- ஆகஸ்ட் 16.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Counselling for Teachers transfer in School Education department will starts on August 12. In this regard teachers can give their applications in District Chief education officer office.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+