TN TRB Annual Planner 2023:15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு எப்போது...!

TN TRB தேர்வு அட்டவணை 2023

கல்வித்துறையில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 149 பணியிடங்களை நிரப்பும் பணியை, டி.ஆர்.பி., எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கவுள்ளது.

கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்கள், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடங்கிய உத்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்கள், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் கனவை நிறைவேற்ற அரிய வாய்ப்பு...!

எவ்வளவு இடங்கள்

அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 4 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது. உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 23 காலி இடங்கள் உள்ளன. இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கான தேர்வு 2023 மே மாதத்தில் நடைபெற உள்ளது.

ஆசிரியர் கனவை நிறைவேற்ற அரிய வாய்ப்பு...!

6,553 பணியிடங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது ஆகிய பாடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதில், 6,304 தமிழ் ஆசிரியர்கள், 133 தெலுங்கு ஆசிரியர்கள், 3 கன்னட ஆசிரியர்கள், 113 உருது ஆசிரியர்கள் என, மொத்தம் 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்வு அறிவிப்பு, 2023 மார்ச் மாதத்தில் வெளியாகும்.

3,587 பட்டதாரி ஆசிரியர்கள்

3587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. இவர்களுக்கான தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 2023 மே மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், தேர்வு ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது.

அரசு பொறியியல் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு, ஜூன் மாதத்தில் வெளியாகும். 97 பணி இடங்களுக்கான தேர்வு செப்டம்பரில் நடைபெறும்.

சட்டக்கல்லூரியில் 129 பணியிடங்கள்

சட்டக் கல்லூரிகளில், 129 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்திலும், தேர்வு அக்டோபர் மாதத்திலும் நடக்க உள்ளது.

267 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

டிசம்பரில் டெட் தேர்வு

2023ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது. 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

ஹாய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான உச்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. உங்கள் ஆசிரியர் கனவை நினைவாக்க, இது சரியான நேரம். இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க தேர்வுக்கான முயற்சியை... வெற்றி உங்கள் கைகளில்....!

தேர்வு, காலிப்பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ

முழு விவரங்ளுக்கு க்ளிக் ப்ளீஸ்....!

ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்...!

http://trb.tn.nic.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Teachers Selection Board, known as TRP, has published the examination schedule with the number of vacancies for college and school teachers and the months of the examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+