டான்செட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வந்துடுச்சு....!

சென்னை: தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான டான்செட் தேர்வு ரிசல்ட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டான் செட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தமிழகத்தில் உள்ள தரம் வாய்ந்த நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

டான்செட் நுழைவுத்தேர்வு ரிசல்ட் வந்துடுச்சு....!

 

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, போன்ற முதுகலைப்படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகள் படிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு டான்செட் தேர்வாகும்.

எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு 27/03.2017ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில் மற்றும் 32 துணை மையங்களில் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

டான் செட் பொது நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுபவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

டான் செட் தேர்வு முடிவினை www.annauniv.edu என்ற இணையதள முகவரிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதியவர்கள் தங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பார்ஸ்வோர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Common Entrance Exam Tancet. The Exam is Conducted to Proper Allocation of MBA, MCA, M.E, M.Tech, M.Arch, M.Planing seats Available in Tamilnadu. Tancet exam result declared today at www.annauniv.edu.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X