சென்னை: எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் படிக்க உதவும் டான்செட் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் உள்ளிட்ட படிப்புகள் படிக்க டான்செட் தேர்வை (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) தமிழக அரசு நடத்துகிறது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் தேதி மே 17-ம் தேதி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேதி தற்போது மே 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு எழுத விரும்புவோர், சம்பந்தப்பட்ட படிப்புகளில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/tancet2016/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
For Daily Alerts