தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 12-ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு துவங்கியது. இத்துடன், 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்குமான தேர்வும் இம்மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இதில், 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புக்குத் தேர்வு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பள்ளிப் பருவத்தினைக் கடந்து அடுத்தகட்ட மேற்படிப்பில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் வாழ்த்துக்கள்.
education school student teacher exam result public tamilnadu பள்ளி மாணவர்கள் தேர்வு ஆசிரியர் தமிழ்நாடு
English summary
Tamil Nadu SSLC and HSC board exams 2019: End Today
Story first published: Monday, March 18, 2019, 17:56 [IST]


Click it and Unblock the Notifications












