மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியாகியுள்ளது. இதில் 90.93 % மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
தேர்வை 3,61,454 மாணவர்களும், 4,15,389 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7,76,844 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 7,06,413 மாணவ- மாணவிகள், அதாவது 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11வது தேர்வு முடிவுகளின் சிறப்பம்சங்கள் இதோ
- தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,76,844
- மாணவியர்களின் எண்ணிக்கை : 4,15,389
- மாணவர்களின் எண்ணிக்கை :3,61,454
- மூன்றாம் பாலினத்தவர் : 01
தேர்ச்சி விவரங்கள்
- தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,06,413 (90.93%)
- மாணவியர் 3,91,968 (94.36%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்கள் 3,14,444 (86.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவர்களை விட மாணவியர் 7.37% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்,
> கடந்த மே-2022ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணாக்கர்கள் 8,43,675. தேர்ச்சிப் பெற்றோர் 7,59,856. தேர்ச்சிச் சதவிகிதம் 90.07% .

கூடுதல் விவரங்கள்
- மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,549.
- 100% தேர்ச்சிப் ற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை-1,792.
- 100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -162.
பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்
- அரசுப் பள்ளிகள் - 84.97%
- அரசு உதவி பெறும் பள்ளிகள் - 93.20%
- தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 97.69%
- இருபாலர் பள்ளிகள் - 91.19%
- ம் பெண்கள் பள்ளிக- 94.29%
- ஆண்கள் பள்ளிகள்- 81.88%
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம்
- அறிவியல் பாடப் பிரிவுகள் - 93.38%
- வணிகவியல் பாடப் பிரிவுகள் - 88.08%
- கலைப் பிரிவுகள் - 73.59%
- தொழிற்பாடப் பிரிவுகள் - 81.60%
முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்
- இயற்பியல் - 95.37%
- வேதியியல்- 96.74%
- உயிரியல்- 96.62%
- கணிதம் - 96.01%
- தாவரவியல்- 95.30%
- விலங்கியல் - 95.27%
- கணினி அறிவியல் - 99.25%
- வணிகவியல்- 94.33%
- கணக்குப் பதிவியல் - 94.97%
100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை
| பொருள் | மாணவர்களின் எண்ணிக்கை |
|---|---|
| தமிழ் | 9 |
| ஆங்கிலம் | 13 |
| இயற்பியல் | 440 |
| வேதியியல் | 107 |
| உயிரியல் | 65 |
| கணிதம் | 17 |
| தாவரவியல் | 2 |
| விலங்கியல் | 34 |
| கணினி அறிவியல் | 940 |
| வணிகவியல் | 214 |
| கணக்குப் பதிவியல் | 995 |
| பொருளியியல் | 40 |
| கணினிப் பயன்பாடுகள் | 598 |
| வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் | 132 |
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி எண்ணிக்கை 5,709 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5,080 மாணவர்களின் (88.98%).
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 108 (86.40%).


Click it and Unblock the Notifications












