மே 17-ல் தமிழக பிளஸ்-2 முடிவுகள்.... முடிவுகளைக் காண இணையதளம் வெளியீடு..!!

Posted By:

சென்னை: மே 17-ம் தேதி தமிழக பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. முடிவுகள் வெளியாகவுள்ள இணையதள விவரமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரலில் நிறைவுற்றன. சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

மே 17-ல் தமிழக பிளஸ்-2 முடிவுகள்.... முடிவுகளைக் காண இணையதளம் வெளியீடு..!!

இந்த நிலையில் இந்தத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் மே 17-ல் வெளியிடவுள்ளது.

முடிவுகளைக் காண http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

இணையதளத்துக்குச் சென்ற பின்னர் அங்கு 'HSC Results March 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் அங்கு பெயர், பிறந்ததேதி, பதிவு எண் ஆகியவற்றைக் கொடுத்து மதிப்பெண்களைப் பெறலாம். மேலும் அதை பிரிண்ட் அவுட்டும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

English summary
Tamil Nadu Board Class 12 (HSC) examination results will be declared on May 17, 2016. Results will be declared by the Directorate of Government examinations, government of Tamil Nadu. Directorate of Government examinations has made an announcement in this regard on its official website. Students who had appeared for the examination can visit the official website to check the results.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia