சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை காலி

Posted By:

சென்னை: பேங்க் வேலைப் பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசைப்படுறீங்களா. அப்ப சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்) , பணிக்கு 52 காலியிடங்கள் உள்ளன.

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை காலி

உதவி மேலாளர் அசிஸ்டன்ட் மேனேஜர்) - டெக்னிக்கல் சிவில் பணிக்கு 15 காலியிடமும், உதவி மேலாளர் அசிஸ்டன்ட் மேனேஜர்) - டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல் பணிக்கு 6 காலியிடமும், பட்டய கணக்காளர்கள் (சார்ட்டடு அக்கோடன்ட்ஸ்) பணிக்கு 31 காலியிடங்களும் ஆக மொத்தம் 52 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பதவியின் பெயர் - சிறப்புஅதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்)
கல்வித் தகுதி - பி.இ / பி.டெக் / சி.ஏ
அனுபவம் - பிரஷ்சர்ஸ்
மொத்த காலிபணியிடங்கள் - 52
வயது வரம்பு - 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஊதியத் தொகை - உதவி மேலாளர் பணிக்கு Rs. 23700 - 42020 / மாதம், பட்டய கணக்காளர்கள் பணிக்கு Rs. 31705 - 45950 / மாதம்
பணியிடம் - இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 14.03.2017

மேலும் கல்வித் தகுதி விபரம் -
உதவி மேலாளர் (அசிஸ்டன்ட் மேனேஜர்) - டெக்னிக்கல் சிவில் - பி.இ மற்றும் பி.டெக் சிவில் பட்டப்படிப்பில் 50% மார்க்குகள் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மார்க் பெற்று இருக்க வேண்டும்)

உதவி மேலாளர் அசிஸ்டன்ட் மேனேஜர்) - டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல் - பி.இ மற்றும் பி.டெக் எலக்ட்ரிக்கல் எஞ்ஜினியரிங் பட்டப்படிப்பில் 50% மார்க்குகள் எடுத்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மார்க் பெற்று இருக்க வேண்டும்)

பட்டய கணக்காளர்கள் (சார்ட்டடு அக்கவுண்டன்ட்) - தகுதி வாய்ந்த பட்டயக் கணக்காளர்கள் தேவை மற்றும் பேங்க் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வுக் குறித்த விபரங்கள் - எழுத்துத் தேர்வில் ரிசனிங் பகுதியில் இருந்து 50 கேள்விகளும் (25 மார்க்) குவான்டிடேட்டிவ் அப்டிடியூடு பகுதியில் இருந்து 50 கேள்விகளும் (50 மார்க்) பிரபஷனல் அறிவு சம்பந்தப்பட்ட 50 கேள்விகளும் (100 மார்க்) ஆங்கில மொழிப்பாடத்தில் 50 கேள்விகளும் கேட்கப்படும் (25 மார்க்) தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்- அகமதாபாத், அமிர்தசரஸ், போபால், பெங்களூர், பெல்காம், புவனேஸ்வர், கோயம்புத்தூர், சென்னை, சண்டிகர், குவஹாத்தி, குவாலியர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, கொச்சி, லக்னோ, மதுரை, மங்களூர், மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, புனே, ராய்ப்பூர், ராஜ்கோட், ராஞ்சி, திருவனந்தபுரம், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டனம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 14.03.2017 (ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்)

மேலும் விபரங்களுக்கு www.syndicatebank.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

English summary
Eng summary : Syndicate Bank Recruitment 2017 for the post of Specialist Officers-Assistant Manager/Chartered Accountants.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia