நீட் தேர்வு ஒத்திவைக்கலன்னா அவ்வளவுதான்!! கடும் கோவத்தில் மம்தா பானர்ஜி!

கொரோனா பரவல் காலத்தில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மம்தா பானர்ஜி நீட் தேர்வு விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என அறிவித்துள்ளார்.

 
நீட் தேர்வு ஒத்திவைக்கலன்னா அவ்வளவுதான்!! கடும் கோவத்தில் மம்தா பானர்ஜி!

மருத்துவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு (நீட்) வரும் செப்டம்பர் 13ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது என்றும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இவை அனைத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்காத நிலையே உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று வேகமாக பரவும் இந்த நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் நலனுக்கு ஏற்றதல்ல. இத்தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி, மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
States should go to Supreme Court again says Mamata Banerjee
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X