ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கன்னியாகுமரி செயின்ட் பால்ஸ் ஐஏஎஸ் அகாடமி, சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையுடன் இணைந்து நுழைவு தேர்வு மூலம் ஒவ்வெரு ஆண்டும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நுழைவு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு நடைபெறும் தேதி: மே 13-2018
வயது மற்றும் கல்வி தகுதி: இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி விபரங்கள்: நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி,படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் பயிற்சிக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத்தேர்வு நடைபெறும் இடங்கள்: களியக்காவிளை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, கோவை.
விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து 6-05-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 6-05-2018