ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி.. எஸ்எஸ்சி அறிவிப்பு

சென்னை : எஸ்எஸ்சி, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 5 மே 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பணி..  எஸ்எஸ்சி அறிவிப்பு

 

வேலை - ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்

கல்வி - ஏதேனும் பட்டப்படிப்பு

பணியின் விபரம் - நிரந்தர பணி

வேலை விபரம் - மத்திய அரசு வேலை

வயது வரம்பு - 30

அனுபவம் தேவை இல்லை. மாதச்சம்பளம் ரூ. 35,400/- முதல் 1,24,000 வரை.

வேலை இடம் - இந்தியா முழுவதும்

விரிவான தகவல்கள்

ஏ முதல் டி வரை உள்ள போஸ்ட் கோடுகளுக்கான தகுதிகள் -

ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அத்துடன் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் 2 வருட டிப்ளமோ கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். அல்லது ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியினை அரசு அலுவலகத்தில் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 2 வருடம் பணியாற்றிய முன் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எஃப் போஸ்ட் கோடுகளுக்கான தகுதிகள் - ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியை மெயின் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இளநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மூன்று ஆண்டுகளிலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

 

ஜி போஸ்ட் கோடுகளுக்கான தகுதிகள் - மத்திய இந்தி பயிற்சி நிறுவனம்

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியை மெயின் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது இளநிலைப் படிப்போடு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கிலம் அல்லது ஹிந்தியை மெயின் பாடமாக எடுத்து பயின்றிருக்க வேண்டும். அல்லது மேல்நிலைப்பள்ளியில் ஹிந்திப்பாடத்தில் ஆசிரியராக குறைந்தது 2 வருடமாவது பணியாற்றிருக்க வேண்டும்.

மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் 5 மே 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக்கட்டணம் - பொதுபிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது.

மேலும் தகவல்களுக்கு ssconline.nic.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SSC Recruitment: Staff Selection Commission published notification to fill the post of Junior Hindi Translator-JHT across the country.Eligible candidates can apply this post in ssc online latest by 5 May 2017.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X