கைப்பந்து வீராங்கனையா நீங்கள்? 8 முதல் 11 வரை இலவசமாக படிக்க அரிய வாய்ப்பு!

Posted By: Kani

விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக செம்மஞ்சேரி, ஜேப்பியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் வரும் வியாழக்கிழமை (26-04-2018) நடைபெற உள்ள விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கையில் பங்கேற்க திறமையுள்ள வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், வாலிபால் விளையாட்டில் திறமையுள்ள வீராங்கனைகள் (8 ஆம் வகுப்பு முதல், பிளஸ் 1) வரை படிக்கும் மாணவியர் மட்டும் கலந்து கொள்ளலாம்.

தேர்வாகும் வீராங்கனைகள், ஜேப்பியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எந்தவித கட்டணமின்றி சேர்த்துக் கொள்ளப்படுவர். விடுதிக் கட்டணமும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் விபரங்களுக்கு, 94446 11278, 97108 77801 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெறலாம்.

English summary
Sports Quota Selection Trials 2018-19 - Jeppiaar Matric School, Semmancheri

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia