பள்ளி வாகனங்களில் ஆய்வு.. குறைபாடு உள்ள வாகனங்கள் பிடிபட்டது...!

சென்னை : தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படுகிறார்களா? எனவும் பள்ளி வாகனங்களின் தன்மை குறித்தும் போக்குவரத்து துறையால் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது,

அதன்படி செங்குன்றம் மோட்டர் வாகன அலுவலகத்துக்கு உட்பட்ட 11 தனியார் பள்ளிகளை சேர்ந்த 135 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின் போது குறைபாடுகள் உள்ள வானங்கள் கண்டறியப்பட்டது. வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து விட்ட பின்னர்தான் அனுமதிச் சான்று அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பள்ளி வாகனங்களில் ஆய்வு
 

பள்ளி வாகனங்களில் ஆய்வு

புழல் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள வாகனங்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, போக்குவரத்து துறை சென்னை வடக்கு சரக இணை ஆணையர் வீரபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

 வாகனங்களுக்குச் சான்று

வாகனங்களுக்குச் சான்று

அப்போது தனியார் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால கதவு, ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவைகள் முறையாக வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டன. இதில் 112 வாகனங்களுக்கு எல்லாம் சரியான முறையில் உள்ளது என சான்று அளிக்கப்பட்டுள்ளது.

குறைபாடு உள்ள வானங்கள்

குறைபாடு உள்ள வானங்கள்

சில குறைபாடுகள் உள்ள 23 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வானங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகி சான்று பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

 இந்தியாவின் எதிர்காலம்
 

இந்தியாவின் எதிர்காலம்

இந்த ஆய்வின்போது அம்பத்தூர் ஆர்.டி.ஓ. அரவிந்தன், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார், பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுமாறன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம் அவர்கள் செல்லும் பள்ளி வாகனங்களில் முறையான ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது அவசியமான ஒன்றாகும். இந்தியாவின் எதிர்காலம் மாணவர்கள்தான். எனவே அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Private school students are safely transported in vehicles? And the nature of school vehicles are being inspected annually by the Transport Department.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X