டெல்லி: சென்னை சாகித்ய அகாடமியில் உதவி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுளள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு மே 29-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்தோ அல்லது அகாடமி அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்தோ பட்டமேற்படிப்பை முடித்திருக்கவேண்டும். மொழி அல்லது இலக்கியப் பாடப் பிரிவில் பட்டமேற்படிப்பை முடித்திருக்கவேண்டும்.
இந்தப் பணியிடத்துக்கு ரூ. 15600/- to Rs. 39100/- + grade pay of Rs. 5400/- என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
வயது 50-க்குள் இருக்கவேண்டும். தகுதி உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு தபால் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்களை மே 29-ம் தேதிக்குள் The secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi-110001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications

