மைசூரு ஆர்ஐஇ இன்ஸ்டிடியூட்டில் படிக்க வர்ரீங்களா.....!!

Posted By:

புதுடெல்லி: கர்நாடக மாநிலம் மைசூருவிலுள்ள ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எஜுகேஷனில் (ஆர்ஐஇ) பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டப்படிப்பில் இது 4 ஆண்டுகளுக்கான படிப்பாகும். இதற்கு பி.எஸ்சி,எட் என்று பெயரிடப்பட்டுள்ளது. பட்டமேற்படிப்பில் இது 6 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். இதற்கு எம்.எஸ்சி.எட் படிப்பு என பெயரிடப்பட்டுள்ளது. 2016-17-ம் கல்வியாண்டில் இந்தப் படிப்பு தொடங்கும்.

மைசூரு ஆர்ஐஇ இன்ஸ்டிடியூட்டில் படிக்க வர்ரீங்களா.....!!

பி.எஸ்சி, பிஎட் படிப்புக்கு பியூசி, பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். குறைந்த 50 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

பி.ஏ. பி.எட் படிப்புக்கு பிளஸ் 2, பியூசியில் தேர்ச்சி பெற்றுக்கவேண்டும்.

இந்தப் படிப்பில் சேர பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.800 கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400 செலுத்தினால் போதும்.

கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.riemysore.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவ, மாணவிகள் இந்தப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆன்-லைனில் விண்ணப்பங்களை மே 13-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.

நுழைவுத் தேர்வு ஜூன் 19-ம் தேதி நடைபெறும்.

English summary
Applications have been invited by Regional Institute of Education (RIE), Mysore for admission into UG/PG Programmes.Admissions are offered in 4 year integrated Bachelor of Science Education, 4 Year integrated Bachelor of Arts Education, 6 year integrated Master of Science Education (M.Sc.Ed) in Physics/ Chemistry/Mathematics) and 2 year Master of Education (M.Ed.) programs for the academic year 2016-17.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia