ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Posted By:

சென்னை: ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700 என்ற விகிதத்தில் ஊதியம் இருக்கும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

http://tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 4 ஆகும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/16_2015_not_eng_ra_tnt_cp.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

English summary
Tamilnadu Public services Commission (TNPSC) has invited applications for the post of Research assistant. For more details aspirants can logon into http://www.tnpsc.gov.in/notifications/16_2015_not_eng_ra_tnt_cp.pdf

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia