டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியில்(ஆர்பிஐ) மருத்துவ ஆலோசகர் பணியிடம் காலியாகவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதி முதல் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
மொத்தம் ஒரே ஒரு பணியிடம் மட்டுமே இங்கு காலியாகவுள்ளது. மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அங்கீகாரம் பெற்ற இன்ஸ்டிடியூட்டில் மருத்துவப் பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் குறைந்தது 2 ஆண்டு காலம் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Regional Director, Reserve Bank of India, Main Office Building, Human Resource Management Department, 15, Netaji Subhas Road, Kolkata - 700 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 8.
வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












