மருத்துவ படிப்பிற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – ஜூன் 19 முதல் கவுன்சிலிங்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து 19 ஆம் தேதி முதல்கட்ட கவுன்சலிங் தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

மருத்துவ படிப்பிற்கான “ரேங்க் லிஸ்ட்” வெளியீடு – ஜூன் 19 முதல் கவுன்சிலிங்

 

இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீடு 398 இடங்கள் போக 2,257 இடங்கள் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீடாக உள்ளது.

இது தவிர தமிழ்நாட்டில் 7 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் 780 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்துள்ளது. இதே போல், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக 85 இடங்கள் உள்ளது. அதே போல 23 தனியார் சுயநிதி பல் மருத்துவ கல்லூரி 1432 இடங்கள் அரசுக்கு கிடைத்துள்ளன.

ஆண்டு தோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சலிங், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்தான் நடைபெறும்.

இந்த ஆண்டு ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பிளாக் ஏவில் நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MBBS and BDS medical studies students rank list released today by the Medical examination center today.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X