சென்னை: ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இங்கு ஸ்டெனோ, டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், எக்ஸாமினர், ரீடர், சீனியர் பாலிப், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர், ஆபீஸ் அசிஸ்டண்ட், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட 88 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் ஈரோடுமாவட்ட முதனஅமை நீதிமன்றத்துக்கு ஜனவரி 29-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.300.கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

