SSC official Twitter Account fact check 2023
எஸ்.எஸ்.சி., என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் பெயரில் இயங்கி வரும் 'ட்விட்டர்' கணக்கு பொய், போலியானது என, பத்திரிகை தகவல் அலுவலகம் 'ஃபேக்ட் செக்'கில் கண்டறிந்துள்ளது.
அதாவது பணியாளர் தேர்வாணையத்துக்கு என, அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு பக்கம் ஏதும் இல்லை.
உஷார்... போலி கணக்கு...!

ட்விட்டர் சமூக வலை தளத்தில், பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு என உலாவரும் '@ssc_official__' என்ற ஐ.டி.யில் கணக்கு இயங்கி வருகிறது. ஹிந்தி, ஆங்கிலம் என, பல ட்வீட்கள் அதில் பதிவிடப்பட்டு வருகின்றன.
ஆயிரக்கணக்கான நபர்கள், இதை பின் தொடர்ந்து வருகின்றனர். அவ்வாறு பின் தொடருபவர்கள், ஏதேனும் போலி நபர்களின் வலையில் விழுந்து விடும் வாய்ப்பு உள்ளதால், அதைத் தடுக்கும் பொருட்டு, உண்மைத்தன்மை குறித்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இஸ் இட் ட்ரூ பேஜ்
SSC GD 2022 PET/PST DATE
15/04/2023 #ssc_official
Instagram page https://t.co/mjuTZm0DaW#sscgd pic.twitter.com/4aBvmVETly
- Staff Selection Commission Of India (@ssc_official__) March 29, 2023
கவனம் தேவை
பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிடப்படும் பல அறிவிப்புகள், இதில் டீவீட்டாக பதிவிடப்பட்டு வருகிறது. இணையத்தில் வெளியாகும் பிடிஎஃப்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டும் சில பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த பக்கம் உண்மையான அதிகாரப்பூர்வ பக்கம் இல்லை என்பது தற்போது வெளிவந்துள்ளது.
எங்களுக்கு கணக்கு கிடையாது...!
பணியாளர் தேர்வாணையத்துக்கு என, தனியாக ட்விட்டர் பக்கம் எதுவும் கிடையாது; இதுவரை இந்த அக்கவுண்ட் யாரால் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த பக்கத்திற்கு 35 ஆயிரம் ஃபாலோயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
A Twitter account @ssc_official__ claims to be the official Twitter handle of the Staff Selection Commission (SSC)#PIBFactCheck
▪️ This account is #Fake
▪️ SSC does not have a Twitter account
▪️ For official information visit SSC's official website: https://t.co/msBYuaGFLZ pic.twitter.com/sMEo1cATth
- PIB Fact Check (@PIBFactCheck) April 4, 2023
தவறான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் அதிகாரப்பூர்வ பக்கம் என, அரசு ஆணையத்தின் பக்கத்தை பயன்படுத்துவது குறித்து, பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பி.ஐ.பி., நடத்திய ஃபேக்ட் செக்கின்படி, எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் என்று கூறப்பட்ட கணக்கு போலியானது. "எஸ்எஸ்சிக்கு ட்விட்டர் கணக்கு இல்லை" என்று இந்த பதிவில் என, தெளிவுப்படுத்தி உள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு ssc.nic.in என்ற, SSCயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications












