டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் பண்டாராவில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலையான இந்தியன் ஆர்டனன்ஸ் தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அடுத்த 21 நாள்கள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
சமையலர், பிட்டர் பாய்லர், தர்வான், பாய்லர் உதவியாளர், பிட்டர் ரெப்ரிஜிரேஷன், பிட்டர் பைப் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த வேலையில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்கவேண்டும். மேலும் ஒரு வருட வேலை பார்த்த அனுபவமும் இருக்கவேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50 வசூலிக்கப்படும், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவனத்தினர், பெண்களுக்கு கட்டணம் இல்லை.
நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர், அதன் பின்னர் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு http://ofbindia.gov.in/units/index.php?unit=ofba என் இணையதளத்தை அணுகலாம்.


Click it and Unblock the Notifications

