உயரம் ஒரு தடை இல்லை: உலகின் உயரம் குறைந்த டாக்டர் இவர்தான்.!!

உயரம் 3 அடிதான் என்றாலும், மருத்துவக் கல்வியில் உச்சம் தொட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ். உயரம் குறைந்தவர், குள்ளன் என்று அனைவராலும் கேலி செய்யப்பட்ட நிலையிலும் கல்வியில் சாதித்து இன்று சமூகத்தில் தனக்கென இடத்தைப் பிடித்துள்ளார் கணேஷ்.

குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). பிறப்பிலேயே குள்ளமான இவருக்கு பலவகைகளில் பிரச்சினைகள் இருந்தன. பள்ளிக்குச் சென்றால் கூடப் படிக்கும் மாணவர்கள் கேலி செய்தனர். இதனால் மனமுடையாத கணேஷ் பள்ளிப் படிப்பில் நன்கு படித்து தேர்ச்சி பெற்றார். பிளஸ்-2 வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

இருந்தபோதும் அவருக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து நீட் தேர்வு எழுதி அதிலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

உயரம் ஒரு தடை இல்லை: உலகின் உயரம் குறைந்த டாக்டர் இவர்தான்.!!

ஆனால் கணேஷின் உயரம் 3 அடிதான். எனவே அவரை எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்க முடியாது என்று அவரது உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், கணேஷ் டாக்டர் ஆக தகுதி இல்லை என அவரை நிராகரிப்பு செய்தது.

இதனால் அடுத்த என்ன செய்வது என்ற பிரச்சினை அவருக்கு எழுந்தது. இதையடுத்து தான் படித்த பள்ளி முதல்வரின் உதவியுடன் குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் கணேஷ் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உயர் நீதிமன்றத்தில் கணேஷ் தொடுத்த வழக்கு தோல்வி அடைந்தது.

இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2018-ம் ஆண்டு கணேஷ் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மருத்துவ படிப்பு படிக்க கணேஷுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து தடைகளைத் தாண்டில் 2019-ல் மருத்துவ படிப்பில் கணேஷ் சேர்ந்தார்.

தற்போது குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் ஆக கணேஷ் பாரய்யா பணியில் சேர்ந்து அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.

இது குறித்து டாக்டர் கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் 3 அடி உயரம் இருப்பதால் அவசர சிகிச்சைகளை பார்க்க முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் என்னை நிராகரித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது டாக்டர் ஆகி உள்ளேன். உயரத்தைக் காரணம் காட்டி ஒருவரின் திறமையை மதிப்பிட முடியாது. என்னால் நிச்சயமாக வெற்றிகரமான டாக்டராக வர முடியும். சமூகத்தில் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கவே நான் முடிவெடுத்துள்ளேன். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை நான் எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவர் உலகிலேயே உயரம் குறைவான டாக்டர் என்ற சாதனை படைத்துள்ளார். 3 அடி உயரம் உடைய கணேஷ் பாரய்யா. தோற்றத்தில் அவர் 4 வயது சிறு குழந்தை காணப்படுகிறார். மிகத் திறமையாக நோயாளிகளைக் கையாண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்கிறார்.
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதை நிரூபிக்கிறார் டாக்டர் கணேஷ் பாரய்யா.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
A 23-year-old Ganesh Baraiya from Gujarat recently completed his MBBS. Standing at just 3 feet tall, he is potentially the world’s shortest doctor. His journey to earn a medical degree had its own challenges, including denial of admission to medical school because of his dwarfism. “I was rejected by the Medical Council of India (MCI) committee and stated that I will be unable to handle emergency cases of my height of three feet, and that's why I would be unable to get admission in MBBS. Than, I spoke to my principle of Nilkanth Vidyapeeth Dr. Dalpath Bhai Katariya, and Revasish Servaiya all about this, and asked them what we can do about it. So , he told me that we can tackle the case in the High Court of Gujarat,” Ganesh Baraiya said to PTI.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+