சட்டப் படிப்பில் கலக்கப் போகும் ஹாரி பாட்டர் !

புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ஹாரி பாட்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு சட்டம் குறித்து பயிற்றுவிக்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டப் படிப்பில் கலக்கப் போகும் ஹாரி பாட்டர் !

 

மேற்கு வங்க மாநிலம், கல்கத்தாவில் தேசிய நீதியியல் அறிவியல் பல்கலைக் கழகம் (என்.யு.ஜே.எஸ்) இயங்கி வருகிறது. இங்கே படிக்கும் நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக புகழ்பெற்ற ஆங்கில நாவலான ஹாரி பாட்டர் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பாடம், அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து, இந்தப் பாட திட்டத்தை வடிவமைத்துள்ள, உதவி பேராசிரியர் சோவிக் குமார் குஹா தெரிவித்ததாவது:-

பிரபல நாவலாசிரியர், ஜே.கே. ரோவ்லிங் எழுதிய, ஹாரி பாட்டர் கதைகள் உலகம் முழுவதும் பிரபலமானது. அவர் எழுதியுள்ள, ஏழு நாவல்களைக் கொண்டு எட்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது, குழந்தைகள், மாணவர்கள் மத்தியில் வெகுவேகமாக பிரபலமானதாகும்.

மாணவர்கள், ஐந்து ஆண்டுகள் சட்டம் படிக்கின்றனர். அதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், ஹாரி பாட்டரைக் கொண்டு இந்த பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். ஹாரி பாட்டர் கதைகளில், தவறு செய்யும் குழந்தைகள் துன்புறுத்தப்படுவர். எந்த சட்ட ஆதரவும் இன்றி துன்புறுத்துவது, சிறையில் அடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

அதேப் போல, மறுவாழ்வுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல், சிறையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இது போன்ற காட்சிகளுடன், தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஒப்பிட்டு, நம் சட்டம் குறித்து விளக்குவதே இந்த பாடத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நண்பர் வீட்டில் ஆடையின்றி பெண் வந்து கதவை திறந்தால் என்ன செய்வீர்கள்?!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NUJS to offer law course based on Harry Potter
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X