ஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழன். உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மொழியின் சிறப்பு சொல்லில் அடங்காத ஒன்றாகும்.

ஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்!

இதனை ஏற்கும் வகையில், தற்போது ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியினை இரண்டாம் மொழியாக பள்ளியில் சேர்த்திருப்பது தமிழ் பேசும் மக்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களுக்குப் பெருமை சேர்த்தியுள்ளது.

தமிழ்

தமிழ்

தமிழ் மொழியானது சுமார் 80 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தாய் மொழியாகவும், 8 முதல் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் இரண்டாம் மொழியாகவும் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் உள்ளது. இணையதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளது என 2017ம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தமிழ்

இந்தியாவில் தமிழ்

தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் இது முதன்மை மொழியாகவும், பெரும்பான்மையினரின் தாய் மொழியாகவும் உள்ளது. அதனையடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதி மக்களின் முதன்மை மொழியாக உள்ளது. மேலும், இந்தியாவின் பிற மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவிலும் பெரும் அளவில் தமிழ் பரவியுள்ளது.

உலகம் ஆளும் தமிழ்

உலகம் ஆளும் தமிழ்

இந்தியாவைத் தவிர்த்து உலகம் முழுவதுமே பல கண்டங்களில் தமிழ் மொழி வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதில், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்களும், தமிழ் மொழிக் கல்வியும் உள்ளது.

தமிழ் மொழிக் கல்வி

தமிழ் மொழிக் கல்வி

ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் தமிழ் மொழி விருப்பப்பாடமாக உள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் தமிழ்

ஆஸ்திரேலியாவில் தமிழ்

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு பாடமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது மொழிப்பாடமாகத் தமிழ்

இரண்டாவது மொழிப்பாடமாகத் தமிழ்

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாகத் தமிழ் பயிற்றுவிக்கப்படவுள்ளது. மேலும், இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NSW students to be Learn new languages like Tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X