புதுடெல்லி: மிசோரத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(என்ஐடி) உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 4-ம், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் 2-ம் காலியாகவுள்ளன.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பங்களை http://www.nitmz.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அனுப்பலாம். பின்னர் பிரிண்ட் அவுட் எடுத்து, தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை The Director, National Institute of Technology, Mizoram, Chaltlang Dawrkawn, Aizawl: Mizoram - 796012 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி மே 31 ஆகும்.


Click it and Unblock the Notifications
