ஹமீர்புர் என்ஐடி-யில் காத்திருக்கும் பதிவாளர் வேலை!!

Posted By:

சென்னை: ஹிமாசலப் பிரதேசம் ஹமீர்புரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில்(என்ஐடி) பதிவாளர் வேலை காலியாக உள்ளது.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

நாட்டிலுள்ள 30 என்ஐடி உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த ஹமீர்புர் என்ஐடி. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

ஹமீர்புர் என்ஐடி-யில் காத்திருக்கும் பதிவாளர் வேலை!!

ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது. 55 சதவீத மதிப்பெண்களுடன் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து மாஸ்டர் டிகிரியைப் பெற்றிருக்கவேண்டும்.

கல்லூரித்துறையில் 15 வருட அனுபவம் இருக்கவேண்டும். வயது 57-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் இந்த பணியிடத்துக்கு Registrar, National Institute of Technology, Hamirpur (H.P.) என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 18. கூடுதல் விவரங்களுக்கு http://www.nith.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
National Institute of Technology, Hamirpur (H.P.) invited applications from eligible candidate for 01 post of Registrar. Interested and eligible candidates can send their application on or before 18 January 2016. Notification Detail Advertisement No.: Admin 14 / 2015 National Institute of Technology, Hamirpur (H.P.), Vacancies Detail Total Number of posts - 01 Name of the Post: Registrar Eligibility Criteria for Registrar Job 2016 Educational Qualification: Master Degree in any discipline from a recognized university with minimum 55% marks. Minimum 15 years of experience in relevant area. Maximum Age Limit: 57 years.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia