நிர்மா பல்கலை.யில் பி.டெக் படிப்பில் சேரணுமா...!!

Posted By:

சென்னை: குஜராத் மாநிலம் ஆமதாபாதிலுள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

4 ஆண்டு படிப்பாகும் இது. 2016-ம் கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளிடமிருந்து நிர்மா பல்கலைக்கழகம் வரவேற்கிறது.

நிர்மா பல்கலை.யில் பி.டெக் படிப்பில் சேரணுமா...!!

கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் ஆகிய பிரிவுகளில் இங்கு பி.டெக் படிப்பில் சேர முடியும்.

இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் பிளஸ் 2வில் இயற்பியல், வேதியல், கணிதம் எடுத்துப் படித்திருக்கவேண்டும். மேலும் ஜேஇஇ தேர்வுக்கும் அவர்கள் விண்ணப்பித்திருக்கவேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் நிர்மா பல்கலைக்கழக இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.

ஜேஇஇ தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இங்கு முன்னுரிமை உண்டு.

ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புவது நல்லது.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கீழ்கண்ட லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

http://admissions.nirmauni.ac.in/CampusLynxNU/onindex.html

English summary
Nirma University, Ahmedabad has invited applications for admission to 4 years Bachelor of Technology (B.Tech) programme. Admissions are offered in the following programmes at Nirma University Institute of Technology for the academic session 2016: Chemical Engineering Civil Engineering Computer Engineering Information Technology Electrical Engineering, Electronics & Communications Engineering Instrumentation & Control Engineering and Mechanical Engineering.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia