சென்னை: பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனையில் ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனை மனநலன் சம்பந்தப்பட்ட வியாதிகள், நரம்பியல் பிரச்னைகளுக்கு தீர்வை அளித்து வருகின்றன. நாட்டிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது இந்த நிறுவனம்.

ஆராய்ச்சி உதவியாளர், சீனியர் இன்வெஸ்டிகேட்டர், ஸ்டாட்டிஸ்டீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள் தற்போது காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். தகுந்த ஆவணங்களுடன் உடன் இணைக்கவேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, NIMHANS, P.B.No.2900, D.R. College Post, Hosur Road, Bengaluru - 560 029. கூடுதல் விவரங்களுக்கு http://www.nimhans.ac.in/ என்ற இணையதள முகவரியை அணுகலாம்.


Click it and Unblock the Notifications

