NEET-UG Results 2023: நீட் தேர்வில் தமிழக மாணவர் அசத்தல்…!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு, தேசிய அளவில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வில் யார் முதலிடம்....?

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி அல்லது நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.

நடப்பு ஆண்டுக்கான (2023) நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசிய தேர்வுகள் முகமை மீண்டும் விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் மீண்டும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பித்தனர்.

இதையடுத்து, மே 7ம் தேதி தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர்.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன்.13 மாலை வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளை https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வில், 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர் அசத்தல்

தமிழகத்தை பொறுத்தவரை விண்ணப்பித்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேரில் 78 ஆயிரத்து 693 பேர் இந்த ஆண்டு தகுதி பெற்றுள்ளனர். தமிழக, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தேசிய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். முதல் 10 பேரில், 4 மாணவர்கள் தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில், உத்தர பிரதேச மாநிலத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டை போலவே, மகாராஷ்டிராவில் இருந்து அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.31 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தானிலும், நீட் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.

முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் யார்?

Ø பிரபஞ்சன் .ஜெ (Prabanjan J)

Ø போரா வருண் சக்கரவர்த்தி (Bora Varun Chakravarthi)

Ø கவுசவ் பவுரி (Kaustav Bauri)

Ø ப்ரஞ்சல் அகர்வால் (Pranjal Aggarwal)

Ø துருவ் அத்வன் (Dhruv Advan)

Ø சூர்யா சித்தார்த் .என். (Surya Siddharth N)

Ø ஸ்ரீநிகேத் ரவி (Shriniketh Ravi)

Ø ஸ்வயம் சக்தி திரிபாதி (Swayam Shakti Tripathy)

Ø வருண் எஸ். (Varun S)

Ø ப்ராத் கந்தேல்வால் (Parth Khandelwal)

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Testing Agency (NTA) has announced the NEET-UG 2023 results today. This year, Prabanjan J from Tamil Nadu and Bora Varun Chakravarthi from Andhra Pradesh have secured rank 1.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+