மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகத்தில் 1.07 லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைத்தாள் கடந்த 25ம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், ஜுன் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
வெளியான நீட் தேர்வு முடிவுகளில் இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கு 160 உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்று 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications












