பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்ட மோடி, பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை போக்கவும், அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தியும் எக்ஸாம் வாரியர்ஸ் என்னும் புத்தகத்தை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதன் அடுத்தகட்டமாக, பரிக்சா பி சர்ச்சா 2 பாய்ண்ட் ஓ (Parksha pe charcha 2.0) என்னும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மோடி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் உரையாடினார்.

மோடியும், பப்ஜியும்..!
இந்நிகழ்வின் போது மாணவரின் பெற்றோர் ஒருவர், தமது மகன் நீண்ட நேரமாக ஆன்லைன் விளையாட்டில் நேரம் செலவழிப்பதாகவும், இதனால் கல்வியில் அவனால் கவனம் செலுத்த முடியவிதில்லை என்றும் கூறினார். அதற்கு பதிலளித்த மோடி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஆல்னைன் விளையாட்டான பப்ஜி-யைக் குறிப்பிட்டு உங்களது மகன் விளையாடுகிறானா? என கேட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, குழந்தைகளைத் தொழில்நுட்பத்திலிருந்து தள்ளி வைக்கக் கூடாது என்றும், அவ்வாறு தள்ளிவைத்தால், அவர்களை இந்த உலகத்திலிருந்தே தள்ளிவைப்பதைப் போன்று என்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.

என் முன் எதிர்கால இந்தியா..!
தொடர்ந்து மோடி பேசுகையில், எதிர்கால இந்தியா என கருதப்படும் மாணவர்கள் முன் நின்று நான் பேசுகிறேன். இங்கு நான் உத்தரவிட வரவில்லை. கலந்துரையாடவே வந்துள்ளேன். எதிர்கால இந்தியாவே என் முன் உள்ளது. தேர்வு என்பது நம்மை செம்மைப்படுத்திக்கொள்ளவும், வளர்க்கவும் உதவும். தேர்வைக் காட்டிலும், வாழ்க்கை முக்கியமானது. பள்ளி தேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல. தேர்வின் தோல்வியை வாழ்க்கையின் முடிவாகக் கருத வேண்டாம் என்றார்.

தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தில் நன்மையும், தீமையும் உள்ளது. அதனை, நம் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களது குழந்தைகள் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் சென்று விளையாடுவதை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். மாணவர்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ட்டேட்டஸ் அப்டேட்..!
தற்போது அரங்கத்தில் இருப்பவர்கள் சிலர் தமது பேச்சைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வேறு சிலரோ, தாம் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் இருப்பதாக நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சமூகவலைத்தளங்கள் மூலம் அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர் என பிரதமர் தெரிவித்தார்.

பெற்றோருக்கு அறிவுரை..!
இந்நிகழ்வின் போது மாணவி ஒருவர் தன் பெற்றோர் எந்நேரமும் அவர்களது கனவை என் மீது செலுத்துவதாகவும், இதனால், என் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். அதற்கு மோடி அவர்கள், பெற்றோர் தங்களால் நிறைவேற்ற முடியாத கனவுகளை, தங்களது குழந்தைகளிடம் எதிர்பார்க்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஓவியக் கண்காட்சி
இந்நிகழ்ச்சியின் நிறைவாக fட்சிக்காக வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளின் ஓவியங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.