சென்னை: மும்பை துறைமுகத்தில் (போர்ட் டிரஸ்ட்) உதவி செயல் பொறியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 23 பணியிடங்கள் காலியாகவுள்ளன. உதவி டிராபி மேலாளர், உதவி செயல் பொறியாளர் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்), அக்கவுன்ட்ஸ் ஆபீஸர், உதவி செக்யூரிட்டி அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பங்களை ஆன்-லைனில் பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களை அப்ளை செய்வது கடந்த 5-ம் தேதியே தொடங்கிவிட்டது. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கடைசி தேதியும் பிப்ரவரி 22தான்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.mumbaiport.gov.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.


Click it and Unblock the Notifications

