சென்னை: டார்க் ரூம் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை, மருத்துவ சேவைப் பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) விரைவில் நடத்தவுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். மொத்தம் 234 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்த வேலைக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் படித்திருக்கவேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற இன்ஸ்டிடியூட்டில் கம்ப்யூட்டர் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டும்.
வயது 18 முதல் 30-க்குள் இருக்கலாம்.
கல்வி, தொழில்நுட்ப சான்றிதழ்கள் அடிப்படையில் இந்தப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த சான்றிதழ்களுடன் பிப்ரவரி 17-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும். இந்த விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 செலுத்தினால் போதும்.
கூடுதல் விவரங்களுக்கு எம்ஆர்பி இணையதளமான http://www.mrb.tn.gov.in-ல் காணலாம்.


Click it and Unblock the Notifications

