பாதுகாப்புத் துறையில் ஆசிரியர் பணி: உடனே விண்ணப்பியுங்கள்!!

Posted By:

சென்னை: ராணுவப் பிரிவில் ஆசிரியராக பணியாற்ற பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன. ராணுவப் பிரிவுகளில் ஒன்றான பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ராணுவ வீரர்களுக்காக ஆடைகள் உற்பத்தி செய்யும் ஆர்டனன்ஸ் ஃபேக்டரியில் இந்த ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மேலும் வாயில்காப்போன் பணியிடங்களும் காலியாகவுள்ளன.

பாதுகாப்புத் துறையில் ஆசிரியர் பணி: உடனே விண்ணப்பியுங்கள்!!

ஆசிரியர் பணியிடங்கள் 9-ம், வாயில்காப்போன் பணியிடங்கள் 20-ம் காலியாக உள்ளன. மகாராஷ்டிர மாநிலம் சந்தா பகுதியிலுள்ள ஆர்டனன்ஸ் ஃபேக்டரியில் காலியாகவுள்ள இந்தப் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு படித்திருக்கவேண்டும். அங்கீகரிப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து இந்தப் படிப்பை முடித்திருக்கவேண்டும். 18 வயது முதல் 30 வயதுக்குள்பட்டோர் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரூ.9.300 முதல் ரூ.34,800 வரை என்ற அடிப்படையில் ஊதியம் இருக்கும்.

வாயில்காப்போன்(தர்வான்) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.5,200 முதல் ரூ,20,200 என்ற அடிப்படையில் இருக்கும்.

இந்தப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'The Senior General Manager, Ordnance Factory Chanda, Post Office: Chandrapur Ordnance Factory, Distt. Chandrapur, Maharashtra State, Pin -442501' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

English summary
The Department of Defence Production, Ordnance Factory, Chanda has invited applications for recruitment to the posts of Teachers (Primary) and Durwan (male). The eligible candidates must send in their duly filled applications along with the attested copies of documents to 'The Senior General Manager, Ordnance Factory Chanda, Post Office: Chandrapur Ordnance Factory, Distt. Chandrapur, Maharashtra State, Pin -442501' by post so as to reach before the closing date. Last Date to Apply: August 21, 2015

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia