லஷ்மி விலாஸ் வங்கியில் நிர்வாக இயக்குநர் பணியிடம்!!

Posted By:

சென்னை: புகழ்பெற்ற லஷ்மி விலாஸ் வங்கியில் நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் இயக்குநர்(சிஇஓ) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு நேற்று (செப்டம்பர் 24) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

லஷ்மி விலாஸ் வங்கியில் நிர்வாக இயக்குநர் பணியிடம்!!

நிர்வாக இயக்குநர் - தலைமைச் செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொது மேலாளராக பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும். மேலும் பொருளாதாரம், வர்த்தக மேலாண்மையிலோ அல்லது சிஓ, காஸ்ட் அக்கவுண்ட், கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப்பில் பட்டமேல்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் வங்கியில் 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.lvbank.com-ல் தெரிந்துகொள்ளலாம்.

English summary
Laxmi Vilas Bank invited applications for the post of Managing Director & CEO. The eligible candidates can apply to the post through the prescribed format within 15 days from the date of publication of advertisement. Details in this regard can be found from the official website www.lvbank.com.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia