பி.எட். கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி நாள்

சென்னை: பி.எட், எம்.எட். படிப்புகளுக்கான கவுன்சிலிங்குக்கு விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 11 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பி.எட், எம். எட் படிப்புகளுக்கு நடப்புக் கல்வியாண்டில் (2015-16) சேர்க்கையை சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

இதற்காக விலிங்டன் சீிமாட்டி உள்பட 13 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 3-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும். காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பி.எட். கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 11 கடைசி நாள்

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2015-16 கல்வியாண்டு பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ, 300 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கல்விக் கட்டணம் ரூ. 175. கட்டணத்தை பணமாகவோ அல்லது, "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை, சென்னை - 600005' என்ற பெயரில் வங்கி கேட்பு வரைவோலையாக சமர்ப்பித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நேரில் மட்டுமே வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பி.எட். சேர்க்கை 2015-16, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005' என்ற முகவரிக்கு செப்டம்பர் 11 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பி.எட். சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Application for the Counselling of B.ed, M.ed Courses will be distributed from September 3 to 11. September 11 is the last date for submitting the application.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+