சென்னை: பெங்களூரு நகரம் யலஹங்கா பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறும் வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.

ஆசிரியர் பணியிடங்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், நர்ஸ், கல்வி ஆலோசகர், யோகா பயிற்றுநர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்கள் தற்போது அங்கு காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை. நேர்முகத் தேர்வுக்கு சான்றுகளுடன் சென்றாலே போதுமானது.
மேலும் விவரங்களுக்கு யலஹங்கா கேந்திரிய வித்யாலயா அதிகாரப்பூர்வ இணையதளமான http://kvcrpfyelhanka.org/newsite/content/home.php?m=homeinfo -ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












